கடலாய்வு (Kadalaivu) - அறிமுகம்!
வணக்கம் உறவுகளே! "கடலாய்வு" (Kadalaivu) தளத்துக்கு வருகை தந்திருக்கும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி! இந்தக் கடலாய்வு வலைத்தளத்தில் கடலாய்வு தொடர்பான தரவுகள், செய்திகள் போன்றவற்றை எம் தாய்மொழியான தமிழில் வழங்கும் நோக்கில் இவ்வலைத்தளத்தை உருவாக்கியுள்ளேன். நீங்கள் கடலாய்வில் ஆர்வமுள்ளவராக இருந்தாலும் சரி, கடலாய்வு மாணவராக இருந்தாலும் சரி, இந்தக் "கடலாய்வு" தளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கடல் நீரோட்டங்கள், கடல்மடி ஆய்வுகள், கடலடித் தொல்பொருள் ஆய்வுகள் போன்ற பல்வேறு விதயங்களையும் நீங்கள் இங்கே எதிர்ப்பார்க்கலாம். அவை உங்களை வியப்பில் ஆழ்த்தும்! கடலின் ஆழம் போன்றே கடலாய்வும் ஒரு ஆழமான துறையாகும். கடலாய்வு என்னும் பெருந்துறையில் பல்வேறு துணைப் பிரிவுகளும் உள்ளன. ஒவ்வொரு துணைப் பிரிவும் கூட மென்மேலும் பல பிரிவுகளாக விரியும். அவற்றை ஒவ்வொன்றாக எதிர்வரும் பதிவுகளில் பார்ப்போம். அன்புடன் ச. தங்கவடிவேல், பிரான்சு 26-02-2024